கடந்து சென்ற காலமும்,
கடல் அலை கலைத்த கால் தடமும்,
கசக்கி எரிந்த காகிதமும்,
ஒழுகி விட்ட ஓவியமும்,
பரவி விட்ட புற்றுநோயும்,
சூரியன் பருகி விட்ட பாலைவனமும்,
அறுந்து விட்ட சிலந்தி வளையும்,
உதிர்ந்து விட்ட வாக்கியமும்,
ஓட்டை விழுந்த ஒசோனும்,
உருகி விட்ட பனிமலையும்,
உயிரை விட்ட என் நம்பிக்கையும்,
சக நண்பர்கள் குழும முறையிடுதே,
உன் மனம் மாறினால் அதில் உயிர் பெறவே..
No comments:
Post a Comment