Monday, February 11, 2013

அதிசயம் எங்கும் அழியும் நண்பர்கள்..

கடந்து சென்ற காலமும்,
 
கடல் அலை கலைத்த கால் தடமும்,
 
கசக்கி எரிந்த காகிதமும்,
 
ஒழுகி விட்ட ஓவியமும்,
 
பரவி விட்ட புற்றுநோயும்,
 
சூரியன் பருகி விட்ட பாலைவனமும்,
 
அறுந்து விட்ட சிலந்தி வளையும்,
 
உதிர்ந்து விட்ட வாக்கியமும்,
 
ஓட்டை விழுந்த  ஒசோனும்,
 
உருகி விட்ட பனிமலையும்,
 
உயிரை விட்ட என் நம்பிக்கையும்,
 
சக நண்பர்கள் குழும முறையிடுதே,
 
உன் மனம் மாறினால் அதில் உயிர் பெறவே..

புதுமை பித்தன் இல்ல பித்தத்துக்கு புதுசு..

1. பித்தத்தின் அர்த்தம் 
தெரியும் எனக்கு மட்டும்..
 
2. சித்தம் முழுதும் 
சிந்தி கிடக்குது உன் சிந்தனை.. 

3.  இரத்தம் எங்கும் 
சிவந்து கிடக்குது 
உன் நினப்பு ..

4. யுத்தம் செய்யுது
மனசும், அறிவும்,
நித்தம் வெல்லுது 
மனசு அதையும்.. 

5. சுற்றம் மொத்தம் 
செத்து கிடக்குது,
உன் மணம் மட்டும்,
சுத்திலும் மணக்குது..

6.  நித்தம் நித்தம் 
நடக்குது இதுவே,
சொல்லிதருது பித்தத்தின் அர்த்தம்!
 
 

இல்லை என்பதின் இம்சை

அழகிய பொய்?
அவளுக்கு என்னை பிடிக்கும்!

அழுக்கான உண்மை?
நான் அவளுக்கு நண்பன் மட்டும்!

நீளமான நாள்?
அவளது விடுமுறை!

கணிதம் இனிப்பது எப்போது?
அவள் புன்னகை என் உயிர் அளக்கையிலே..

உயரிய வீரம்?
காதலை உரைப்பது! :-p 

உயிரை உருக்கும் சோகம்?
அவள் இல்லை சொன்னது!

Monday, February 4, 2013

யாமறிந்த கண்ணகி

கண் விழி கண்ட போதையும்,  
கால் வழி சென்ற பாதையும்,
காட்டிதும் சொர்கம்..

என, மாதவம் இருக்கும்,
மனைவியை மனதில் மாய்த்து..
மாதவி அணைத்தான் என்ற,
கொடி செயல் அறிந்து,

கண் விழி சுடராக்கி,
கால் வழி சென்ற,
செங்குருதி உறைவித்து,
புகுத்தினால் மாணிக்கமாய்.
சிலம்பினுளே..

சிறை புகும் சோகம்,
சிறிதொன்றும் இல்லை,
அவள் கால் உரசி சிணுங்கி,
சிரித்து சேதி சொல்லும்,
யாம் சிலம்பினுள் மாணிக்கம்,
இவள் மங்கையிருள் மாணிக்கம் என்று...

போகும் வழியெலாம் அவல
தடம் பதிக்கும்,
காட்டாற்றையும்  அணைத்து,
சேர்த்திடுமே ஓர் அணை..
தமிழ் வீரம் செறிந்த,
குருதி கட்டுன்தன கண்ணகியின்
சிலம்பொத்த அணையிலே...

எவனவன் ஆயினும்,
கணவனை கயவன்
என்றவனை தீக்கிரையாக்க
துனிந்தனல் தூயவள்...

சிறை பிடித்த சிங்கங்களை,
அணை அடைத்த காட்டாற்றை,
தன் உணர்வுகளின் உருவமாய்,
ஒளிந்து கிடந்த மாணிக்கங்களை..

விட்டெறிந்தால் கோவின் அரசவையிலே,
கோவலனுக்கு  இழைத்த அநீதி கேட்கையிலே...

Friday, February 1, 2013

முப்பொழுதும் உன் கற்பனையே!!

பொழுதொன்று..

உறக்கத்தின் உதடுகள்,
விழிகளை முத்தமிடுகையில்,
உன் வண்ண முகம்..
என் நினைவு குடுவைகளை,
நிரப்பி கொண்டிருக்கும்..



பொழுதிரண்டு..

நினைவுகளை நிரப்பியவள்..
கனவுகளையே எனக்கு,
கனவாக்கி  போன  காலம்..



சேர்த்து முப்பொழுது..

கண் மயங்கும் நேரம் சேர்த்து,
கனவுகளையும்,
ஆக்கிரமித்து கொண்டவள்..
சற்றும் தயங்காமல்
கண் விழிக்கும் பொழுதையும்,
திருடி கொண்டவள்...

நிசப்தம் அகன்று..
உறக்கம் உரைத்த,
அவள் எண்ணம் மறைத்து..
அவளை கவி பாடிய,
என் கனவுகள் கலைந்து ,
கண் விழிக்கையில்..
நெஞ்சு குடுவையில்
அவள் ஊற்றிய வண்ணங்கள் கொண்டே,
இன்னும் வரைந்து கொண்டு இருக்கிறாள்..

உன் வரைபடமாகவும்,
உன் படம் வரையும் பலகையாகவும்,
மாறிவிட்ட என் நினைவை
வெள்ளை அடிப்பது எப்படி?

மூளையற்ற இதயமே..

வார்த்தைகள்..

நடை தளர்ந்த வயோதிகன் போல்,
இடறி விழுந்தன..

காட்சிகள்..
பூட்டிய அறையிலும்,
பார்வை படும் பக்கமெலாம்,
பனி மூட்டமாய்..

நிகழ்வுகள்..
அருகில் நடப்பவை அனைத்துமே,
அருவியில் குளிக்கையில் வரும்,
ஓசையாய் மட்டுமே..

கனக்கும்  கணங்கள்..
 நெஞ்சில் ஏறிய,
இனம் தெரியா கனம் இறங்க,
எடுத்த கணங்கள் எத்தனை?
மூளையற்ற இதயமே..
உனக்கென ஒரு மூளை தனியாக இருந்திருந்தால்..