வெறும் பயலின் மோகம் இது;
வேடிக்கை பார்த்து வளரந்த் தாக்கம் இது..
கண்டதும் வந்தது
விபத்தில் வந்தது
விழி பேசிய நொடியில் வந்தது என்றவரை
வயதிற்கு வந்ததால் வந்ததென்று
நையாண்டி அடித்த திமிர் எங்கு?
பொழுது புலர்ந்தாலும்;
ஆதவன் ஆர்பறித்தாலும்
அந்தி மறைந்தாலும்
மானிட பதர் மண்ணில் தூங்கி மடிந்தாலும்
மண்டையிலும்
மனதிலும்
மணி அடித்து கொண்டே இருக்கிறது
உன் நினைவு!!

Semma.
ReplyDelete