Wednesday, December 26, 2012

காதலும் கடவுளும்

காதலும் கடவுளும் என் பார்வையில்
அவை இரண்டுமே கற்பிக்கப்பட்டவை.

உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்
உண்மை காதல்
அது பரிணாமம் கற்பித்தவை.

எதிர் பாலினம் மேல் கொண்ட
மோகம் தனை காதல் என
மெருகேத்தி காதல் என 
மாயம் கொண்டோம் இன்று!

சினம் கொண்ட சிங்கமும்
மதம் கொண்ட யானையும்
சீரும் பாம்பும்
இடியும்
மின்னலும்
நிலை குலைய வைத்த
எதுவும் சேர்த்து
விடை காணா வினாக்களும்
கடவுள் என செய்தோம் அன்று!

அவன் நாமம் இசைந்தால்
பெரும் மோட்சம் என்று
கற்பிக்கும் நூல் எத்தனை
பரிதாபம் இன்று!

கேள்வி குறைந்து
கற்றல் கரைந்து
இயற்க்கை கற்பித்தவை மறந்து
கற்பிக்கப்பட்டவை மட்டுமே
வளர்ந்து வருகின்றது!


 

No comments:

Post a Comment