கூரிய கத்தி நெருங்கி வருவதை கண்டும்
இளித்து கொண்டே இருந்தது இனிப்பப்பம்
கத்தி கதறவும் இல்லை
கத்தியை கண்டு அசரவும் இல்லை
உன் கூரிய விழியாலும்
நீ கூறிய மொழியாலும்
இனிப்பப்பமும் மயங்கியது போல
அதன் மெல்லிய உடல் கீறி
பதமாய் உள் செலுத்தி
அளந்து வெளி எடுத்து
படக்கென உனக்கு நீ ஊட்டி கொண்ட அழகில்
அதன் வலி மறந்து திரும்ப இளிக்க தொடங்கியது
இனிப்பப்பம்!
என் உடல் கீறி இதயம் நுழைந்து
உள் சென்று தலை கீழாய் உருட்டுகின்றாய்
எனை நீ ஏற்று கொண்டால்
ஆவேன் நானும் இனிப்பப்பம் இளித்துகொண்டே..
இளித்து கொண்டே இருந்தது இனிப்பப்பம் கத்தி கதறவும் இல்லை
கத்தியை கண்டு அசரவும் இல்லை
உன் கூரிய விழியாலும்
நீ கூறிய மொழியாலும்
இனிப்பப்பமும் மயங்கியது போல
அதன் மெல்லிய உடல் கீறி
பதமாய் உள் செலுத்தி
அளந்து வெளி எடுத்து
படக்கென உனக்கு நீ ஊட்டி கொண்ட அழகில்
அதன் வலி மறந்து திரும்ப இளிக்க தொடங்கியது
இனிப்பப்பம்!
என் உடல் கீறி இதயம் நுழைந்து
உள் சென்று தலை கீழாய் உருட்டுகின்றாய்
எனை நீ ஏற்று கொண்டால்
ஆவேன் நானும் இனிப்பப்பம் இளித்துகொண்டே..
No comments:
Post a Comment