உரையாடல் நான் துவங்க,
hi என்று தொடங்கவா?,
hey என்று எடுக்கவா?,
wat up என்று உரைக்கவா?,
துங்கலையா என்று
சராசரி கேள்வி கேட்கவா?
இந்த ஐந்து நிமிட தேர்வில்
கிறுக்கவும் அழிக்க்கவுமாய் இருந்து,
வினவி விட்ட வினாக்கு
விடை வரும் வரை. .
வேதாளம் முருங்கை ஊன்றியது போல்,
என் விரல்கள் refresh button மேல்
விழுந்து கிடக்கும்!
விடை வரவில்லை எனில்
முகத்தை தலையணையில் புதைத்து
அன்றைய தினத்தையும்
அன்றைய தினத்தையும்
அவளது நினைப்பையும்
கொல்ல முனைப்பேன்!










